அழகியசிங்கர்/கிரிக்கெட்

சில தினங்களுக்கு
முன்னால்
கிரிக்கெட் பைத்தியமாக
எல்லோரும்
அலைந்து
கொண்டிருந்தார்கள்
ஒரே ஆர ப்பா‌ட்ட‌ம்
ஒரே கூச்சல்
டிவியில் பார்த்துக் கொண்டிருந்த
எனக்கு
தூங்கும்போது
படப்படப்பாய் உணர்வேன்
மனசைக் கட்டுப்படுத்த
முடியாத என்ன கண்றாவி
என்று தோன்றும்
செய்தியை அறிந்தபோது அதிர்ந்தேன்
இப்படி வெறிக் கூச்சலுடன்
அலைபவர்கள் அவலத்தை எண்ணி
வருந்தினேன்