சசிகலா விஸ்வநாதன்/இழந்து போன உயிர்களும்- கிரிக்கெட் மேட்சும்

பதினெட்டு வருடக் காத்திருப்பு
கரைபுரண்ட மகிழ்வு!
வரைமுறையற்ற ஆவேச எழுச்சி
பதினெட்டு மணி நேரத்தில் வடிந்தது.
இப்போதும் கூக்குரலும் சத்தமும்!
ஒருவருக்கு ஒருவர்
சொல்கிறார்கள்;
நானில்லை அங்கு!
நீதான்! நீதான்!
மிரளும் தலைவர்கள்;
புரட்டிப் பேசும் அதிகாரிகள்!
குழம்பிய குட்டையில்
மீன் பிடிக்கும் எதிராளிகள்
பந்தயத்தில் ஆடின குதிரைகள்
கதை கந்தலும் கந்தாயமுமாக.

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/இழந்து போன உயிர்களும்- கிரிக்கெட் மேட்சும்”

  1. கிரிக்கெட் விளையாட்டுக்குக்
    கொடுக்கும் மதிப்பு மற்ற விளையாட்டுக்கு இல்லை என்பதே வேதனையான விஷயம் அதுவும் ஆண் கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே முன்னுரிமை, வேதனையான விஷயம்

Comments are closed.