
நீ ஏன் எங்கோ
பார்த்துக் கொண்டிருகுகிறாய்!
வானத்தில்
மிக உயரே
வட்டமிடும் பறவையை
எத்தனை நேரம்
பார்த்துக் கொண்டிருப்பாய்!
அது தன் துணையை
தேடிக் கொண்டிருக்கிறது!
நான்
உன்னருகில் தான்
இருக்கிறேன்!
மனதுள்ளே
உன்னோடு தான்
பேசிக் கொண்டிருக்கிறேன்!
உன் நினைவுச்
சிறகுகளின் இறகுகள்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து
போகுமுன் நீ திரும்பிப் பர்த்துவிடு!
சற்றே திரும்பிப்
பார்த்தால் போதும்!
ஒரு வெண்ணிற மலரின்
சிரிப்பில் மலர்ந்த நம் நேசம்
உயிர்பித்துவிடும்!
அவ்வுயிர்ப்பின் பெருமூச்சில்
நம் உள்ளங்கை வெப்பம்
இன்னும் கரையாமல்
இருப்பதை நீ உணர்வாய்!
நம் உறவின் நூலிழையில்
அணையா தீபமொன்று
எரிந்து கொண்டிருக்கிறது!
தீபத்தின் வெளிச்சத்தில்
இருவர் நிழலும்
அசைந்து கொண்டே இருக்கிறது!
