வேகல்யாண்குமார்/பிள்ளைகள் உலகம்.!

சின்ன சின்னப் பிள்ளைகளே வாங்க!
பள்ளிக்கூடம் திறந்தாச்சு வாங்க.!
வண்ண வண்ணப்
பட்டாம்பூச்சி நீங்க..
வல்வராய் உயரவேணும் நீங்க.!

அரசுப் பள்ளியில் நீங்க சேரணும்..
ஆர்வமுடன் தாய் மொழியைப் பயிலணும்..
புதுசுப்புதுசாக படித்து அறியணும்..
புதிய உலகத்தின் ஔியில் தெரியணும்..!

ஒன்றுகூடி நீங்க ஆடி மகிழணும்..
என்றும் பெற்றவர் சொல்லைக் கேட்கணும்..
நன்று என்பதை இன்றே செய்யணும்!
நாளை உலகத்தை ஆண்டு உயரணும்.!

காலையில் எழுந்து பாடங்கள் படிப்பாய்..
காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்வாய்..
மாலை முழுவதும்..
விளையாடி மகிழ்வாய்
மனிதநேயத்தை செயலாய் புரிவாய்..