
20/06/2025 அன்று நடைபெற்ற விருட்சம் நடத்திய “கவிதை வாசிக்கும்” நிகழ்ச்சியில் நான் வாசித்த பத்து கவிதைகள்.
(1)முயற்சி:
முட்டி முட்டி பார்க்கிறேன்
முட்டி மோதி பார்க்கிறேன்
முக்கனிச்சாறு போல்
கவிதையை நான்
இங்கு தர
முக் கண்ணன் மைந்தனே
நீரே முன்னின்று அருளுமையா.
(2)
நீர்
தாகம் தனை தீர்க்கும் நீ என்
தண்ணீர் தாகம் தீர்க்கும் நீர்
பாவங்களையும் கழிக்கும் நீர்
நீ என் தாபம் தனை தணிக்கும் நீர்.
பூமி(3)
நில மகளே! அன்னை நில மகளே!
நீ இல்லாது இங்கு நாங்கள் ஏது? எங்கள்
நலம் பேன உனை நீ வருத்தியது தான்
எத்தனை எத்தனை
மாநிலம் வாழ நீ செய்த தியாகம் உன்னை தாய் என அழைக்குது
மானிடம் இங்கே!
.
காற்று(4)
நீ அல்லால் எதுவும் இல்லை இங்கே
நீ அசைய இயங்கும் அனைத்தும்
இங்கே
நீயே அனைத்தின் உள்நின்று நடாத்
துகிறாய்
நின்னாடிமை தானே யாவும் இங்கே.
நெருப்பு(5)
சூரியனாய் மேல் நின்று உயிர் தருபவனே
அக்கினியாய் நின்று இங்கு அறம் வளர்ப்பவனே என்னுள்
ஜடராக்கினியாய் நின்று
செரிமானம் செய்பவனே
அன்பில்லாதவரை அனலாய் கனன்று
காய்ச்சுபவனே.
ஆகாயம்(6)
காயம் என்றால் உடல்
நீயோ ஆ காயம்
என்னவென்றே தெரியாத ஒன்று நீ
ஆ! என்னும் “வியப்பு” க்கு நீயே உதாரணம்
ஆ – என்னும் ” இரக்கத்துக்கும் “நீயே
ஆதாரம்.
யானை(7)
பாலன் முதல் பாட்டன் வரை விரும்பு ஒரே ஆள் நீ தாயா,
ஓரிடம் நில்லாது நீ ஆடும் ஆட்டம்காண
கூடுதய்யா மக்கள் கூட்டம் இங்கே
அன்று ஈசனின் மகனுக்கே தலையாய்
நின்றது, , ஐயா .நீதானே
ஸிம்ஹம் (8)
காட்டுக்கு ராஜா நீதானே
நடைக்கும் ராஜா நீதானே – எம்
அன்னை அமருவதும் உன்மேல் தானே
மால் கொண்ட உருவமும் நீதானே- திரு
மால் கொண்ட உருவமும் நீதானே
நர ஸிம்ஹமும் நீ தானே.
(நல்ல ) பாம்பு(9)
எத்தனையோ விலங்குண்டு பூமியிலே
அத்தனையிலும் நல்லதுன்னு ஒன்று இல்ல
ஆனா உனக்குமட்டும் (பொருந்தா )
இப்பெயர வச்சாது யாரு?
அப்பன் மகன் மற்றும் மாமனுக்கும்
புடிச்ச ஆளு நீ தான் சாமி
அன்பு:(10)
எதற்கும் ஒரு எல்லையுண்டு இங்கே
நதிக்கு இரு புறமும் கரைகள் உண்டு
‘மதி’ க்கும் (சந்திரன் )வரையரை
இங்குண்டு பட்சமென(வளர் பிறை தேய் பிறை என) –
ஆனால் அன்புக்கு
உண்டோ ஒரு எல்லை?
