
இதற்கு முன்னாலும் இப்படி நடந்திருக்கிறது. ஆனால் தொகை இவ்வளவு பெரிதில்லை. எல்லாம் ஒன்று, ஐந்து, பத்து தான். ஆனால் இப்போது ஒரேயடியாக எழுபத்தெட்டு வாங்கி நூறு ரூபாய் நோட்டை மாற்றிப் பாக்கிப் பணம் ரூபாய் காணோம். பாத்திரச் சீட்டும் கொடுத்து மருந்தும் எழுபத்தெட்டுச் சில்லறை. சில்லறை இருக்கிறது, ஆனால் நோட்டுக்களைக் காணோம். எப்போதுமே பணத்திற்குக் கஷ்டம்தான். ஒரு மாதம்கூடக் செலவுகள், எதிர்பார்த்த செலவுகளோடு நின்றதில்லை. அடுத்த மாதம் செருப்புத் தொலைந்து போய்விடும். ஒரு மாதம் மூக்குக் கண்ணாடி உடைந்துவிட்டால் குழந்தைகளுக்கு வரும் சுரம் ஒருமுறை மிளகு கஷாயம் சாப்பிட்டதோடு போய்விடாமல் டாக்டருக்கும், மல மூத்திரப் பரிசோதனைகளுக்கும் மருந்துக்குமாக அறுபது ரூபாய்க்கு வழி வைத்துவிடும்.
ஒரு வார காலத்திற்குள் மூன்று உறவினர்கள் கல்யாணம் செய்து கொண்டுவிடுவார்கள். ஒவ்வொரு கல்யாணத்திற்கும்- குறைந்தது பதினைந்து ரூபாய் செலவாகும். போய் வர பரிசளிக்க.
பெரிய பெண் சென்றுவரும் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் டில் பரீட்சைக்கு என்று மட்டும் ஐம்பது ரூபாய். மூன்று நாட்களுக்குள் கட்ட வேண்டும்.
இப்படி ஒவ்வொரு மாதமும் எல்லாம் வேண்டாம் என்று சொல்லமுடியாத செலவுகள். பணம் காணாமல் போனதும் உண்டுதான். ஆனால் அதெல்லாம் அங்கேே கிடையாது. ஆனால் இம்முறை யாரோ வேண்டுமென்றேதால் யாரோ எடுத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்படும்ப எடுத்திருக்கிறார்கள். யாரைக் கேட்பது. பெரியவர்கள் குழந்தைகள் என்று வீட்டில் மொத்தம் எட்டுப் பேர். எட்டு நபர்களில் ஒன்று இன்னும் ஒரு வயது முடியாத குழந்தை. அது பிறந்த வேளை, எல்லா ரகப் பால் பவுடர்களும் விலை உயர்ந்தன. சிரிப்பாகச் சிரிக்கும் லாக்டோடக்ஸ்கூட இரண்டு ரூபாய் விலை கூடிற்று. விலை கூடவில்லை? உப்பு புளி மிளகாயிலிருந்து தையற்கூலி, மின்சாரக் கட்டணம், ரிக்ஷா சத்தம் வரை எல்லாமே உயர்ந்த வண்ணமே இருக்கின்றன. விலை குறைந்தது என்று எதைக் கூற முடியும்? பழைய பேப்பர் கடையில்தான் ஆங்கில செய்தித் தாள்களை முன்பு கிலோ இரண்டு ஐம்பது வரை வாங்கினார்கள். இப்போது ஒன்று தொண்ணூறு வாங்கும் பொருட்கள் எல்லாம் விலை கூடிக்கொண்டே போக நாம் விற்கக்கூடிய ஒரே பண்டம் சரிந்து விழுகிறது.
பழைய மாம்பலம் மளிகைக் கடையொன்றில் புளி கிலோ ஒன்பது ரூபாய் என்று பலகையில் எழுதிப் போட்டால்கூட அதனடியில் ‘விலைகள் பயங்கரச் சரிவு’ என்றும் எழுதியிருக்கும். பயங்கரச் சரிவு! பயங்கரம்! விலைகள் இப்படித் தாங்க முடியாதபடி சீறிக்கொண்டு போகும்போதுகூடச் சரிவு என்று நினைத்துக்கொண்டு ஏமாற்றிக்கொள்ள வேண்டியது எவ்வளவு பயங்கரம்!
விவரம் அறியாத வயதில் இருட்டுதான் மிகப் பெரிய பயங்கரம்! நாளாக நாளாகப் பயங்கரங்கள் நிறையத்தான் தெரிகின்றன. அத்தனை பயங்கரங்களும் வெட்ட வெளிச்சத்தில். பணம் என்பதைப் பற்றிய எல்லாமே பயங்கரங்களாகிவிட்டன. பணம் என்றால் என்ன? பணம் என்றால் மதிப்பு. எதன் மதிப்பு? பணத்திற்காகவே சுயமாக மதிப்பு உண்டா? பணம் சாத்தியமாக்கும் வசதிகளுக்காக மதிப்பு. இப்போது எழுபத்தெட்டு ரூபாய் காணாமல் போய்விட்டது. அப்படியென்றால் எழுபத்தெட்டு ரூபாய் ஏற்படுத்தித் தரக்கூடிய வசதி இருக்காது. இந்த வசதி ஏற்கனவே இருந்தது, இல்லாமல் போய்விடவில்லை. ஆதலால் இல்லாதது இல்லாமல் போய்விடவில்லை. ஆதலால் இல்லாதது இல்லாமல் போய்விட்டது. அதாவது எதுவும் வரவில்லை. போகவில்லை. அப்படியென்றால் இந்த எழுபத்தெட்டு ரூபாய் காணாமல் போய்விட்டதில் ஏதும் போய்விடவில்லை. ஆனால் ஏதும் போய்விடவில்லை என்று நிம்மதியாக இருக்க முடியவில்லையே!
எழுபத்தெட்டு ரூபாய். இரண்டு இருபது ரூபாய் நோட்டுகள். இரண்டு பத்து ரூபாய் நோட்டுகள். இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகள். இரண்டு இரண்டு ரூபாய் நோட்டுக்கள். பாக்கி நான்கு ரூபாயும் ஒரு ரூபாய் நோட்டுகள்.
கடைசியாக அந்தச் சீட்டுக் கம்பெனியிலிருந்து பணம் பாக்கி வாங்கிப் பத்திரமாக அலமாரியில் எண்ணி வைத்தது. ஒரு ரூபாய் நோட்டு ரொம்ப நோட்டை மேலே தூக்கிப் பார்த்ததில் நடுவில் ஓட்டை தெரியவில்லை. பழைய நோட்டு. தொடுவதற்கே ரொம்ப அருவருப்பாக இருந்தது. அந்த ஆதலால் அது செல்லும். ஆனால் யாரும் சந்தேகப்படுவார்கள். அவர்களால் ஒருமுறை வெளிச்சத்தில் பரிசோதித்த பிறகுதான் சரி என்பார்கள். வேண்டாம், வேறே நோட்டு என்று சொன்னாலும் சொல்லலாம். அந்த நோட்டைத்தான் எல்லாவற்றின் மேலாக வைத்திருந்தது. அடுத்து வரும்
முதல் செலவுக்கு அந்த நோட்டைச் செலவழித்துவிட வேண்டுமென்று, யார் எடுத்திருப்பார்கள்? யாரோ எடுத்துத்தான் இருக்க வேண்டும். ஆனால் யாரைச் சந்தேகிப்பது? சந்தேகித்தாலும் யாரைக் கேட்பது? எல்லாருக்கும் தெரியும். ஆதலால் எடுத்திருக்க மாட்டார்கள். ஒருவேளை இந்தப் பணம் காணாமல் போனதில் யார் அவதிப்படுவார்கள் என்று பட்டால் படட்டும் என்று யாராவது நினைக்கத் தொடங்கிவிட்டார்களோ? ஐயோ, இப்படிக் குரூர புத்தி இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படி சொல் கடிந்துகொள்வது கிடையாது. கஷ்டம்தான். எல்லாம் எல்லாருக்கும். வந்தது? இந்த வீட்டில் ஒரு வார்த்தை அதட்டிப் பேசுவது கிடையாது. ஒரு தாராளமாகக் கிடைக்காததுதான். ஆனால் யாரும் எனக்கு மட்டும் இருந்தால் போதும் என்ற சுயநலம் கொண்டவர்கள் கிடையாது. இப்போது அப்படியும் ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது. யாரோ பணத்தை எடுத்திருக்கிறார்கள். வீட்டுக்காக, பொதுவாக எல்லாருக்குமா செலவு செய்ய வேண்டிய பணம்
இப்போது மொத்தமாகக் காணோம்.
யாரோ ஒருவராக எடுத்துக்கொண்டு போயாயிற்று.
பணம் காணாமல் போய் யாரோ அவதிப்படுவதைவிட இந்த வீட்டில் இந்த மாதிரி சுயநலம் புகுந்ததுதான் கொடுமை. இனிமேல் இது ஒருவரோடு நிற்காது. அடுத்த முறை எண்பத்தெட்டு ரூபாய் காணாமல் போகும். அதற்கடுத்த முறை தொண்ணூற்றெட்டு ரூபாய் காணாமல் போகும்.
இப்படி ஒவ்வொருவராக மற்றவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பணத்தைத் திருடிக்கொண்டு போகத் தொடங்குவார்கள். திருட்டு, இந்த வீட்டில் திருடன்.
திருடன்! எவ்வளவு பயங்கரமான பெயர். ஒரு மனிதனைத் திருடன் என்று சொல்லிவிடுவதா? திருடன் மற்றவர்கள் கையில் அகப்பட்டால் மட்டும் எல்லாரும் அடித்து நொறுக்கித் தீர்த்துவிடுவார்கள். பிடித்தவர்கள் போக கடைசியில் போலீஸ்காரரும் அடித்து நொறுக்கிவிடுகிறார். திருடன் என்ற பெயருடன் போலீஸ்காரரிடம் அகப்பட்ட எவனுக்கும் அப்புறம் ஆறு மாதங்களுக்கு கைகால் ஒழுங்காக இருக்காது. அது என்னமோ அடியைக் காலில்தான் போடுகிறார்கள். இப்பக்கம், அப்பக்கம், அப்பக்கம், இப்பக்கம். ஒரு காலில் அடி வாங்கித் துடிதுடித்து முடிவதற்குள் இன்னொரு காலில். அடிப்பதற்குக் கால் சௌகரியமாக இருக்கிறது. கை நீண்டால் காலில் அடி, இந்த வீட்டில் யாருக்கோ கை நீண்டுவிட்டது.
இந்த எழுபத்தெட்டு ரூபாயை எடுத்ததில் நிஜமாகவே யாருக்காவது கை நீண்டுவிட்டால் எல்லாருடைய கைகளையும் அளந்து திருடனைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் யாருக்கும் அப்படித் திடீரென்று, கண்ணுக்குத் தெரியும்படி கை நீண்டு போன மாதிரித் தெரியவில்லை. ஆதலால் அவர்களுக்குள்ளேயே இன்னொரு கை கால் இருக்க வேண்டும். அதில் கை நீண்டுவிட்டது. உடனே அந்த உள்ளங்காலில் அடி விழுந்திருக்கும். போலவும் ஆயிற்று. வெளியே காயமும் தெரியாது. ஏன் அடித்தாய் என்று வெளிக்காலைவிட உள்காலில் அடியைப் போடுவதுதான் நல்லது. அடித்தது புதிதாகப் போலீஸ்காரர்கள் உன்னை வந்து பிடித்துப் போய் உன் காலில் அடி போடமாட்டார்கள். காயம் தெரியாமல் அடிப்பது ஒரு மேற்புறத்தோலுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. உள்ளே சதையும் எலும்பும் துவண்டு துவம்சமாகி இருக்கும். எனக்கு இப்போது யாரையும் அடிக்க வேண்டாம். எழுபத்தெட்டு ரூபாய் திரும்பக் கிடைத்தால் போதும்.
“யாரோ தெரியாமல் அல்லது ஞாபக மறதியாக எடுத்துப் போயிருக்க லாம்; தயவுசெய்து மீண்டும் அலமாரியில் கொண்டு வைத்துவிடுங்கள்” என்று ஓர் அறிவிப்பு எழுதி வைக்கலாமா?
வீட்டில் பாதிப் பேருக்கு இதைப் படிக்கத் தெரியாது. படித்தாலும் வாக்குறுதி என்று சொல்வதே ஏதோ போலிருக்கிறது. மிகவும் செயற்கையாக இருக்கிறது. ஒரு கூரையடியில் வசிப்பவர் போலியாக இருத்தல் எப்படி சாத்தியம்? சாத்தியமானாலும் அது நல்லதா?
இல்லை. திருடுவதைவிட இந்தப் போலித்தனம் மோசம். ஆதலால் ஒவ்வொருவராகக் கூப்பிட்டுக் கேட்டுவிட வேண்டியதுதான். தனித் தனியாகக் கேட்பதா, ஒரே முறையாக எல்லாரிடமும் கேட்பதா? ஆறு நபர்களிடம் ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்பது மிகவும் அலுப்புத் தரும் விஷயமாயிருக்கும். ஆதலால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாகக் கேட்க வேண்டும். “எழுபத்தெட்டு ரூபாயை பார்த்தாயா,” இன்னொருவரிடம் “கொஞ்சம் பணம் காணாமல் போய்விட்டது. மறந்து போய் உன் பையில் வைத்துவிட்டேனா?” இன்னொருவரிடம், “அலமாரியில் வைத்திருந்த சில நோட்டுகள் பறந்து கீழே விழுந்துவிட்டது போலிருக்கிறது, நீ எடுத்து வைத்தாயா?”
இதுவே போலித்தனம். பணத்தைத் திருடினாயா என்று கேட்பதுதான் சரியான கேள்வி, ஆனால் சரியானதைச் செய்ய முடியவில்லை. செய்ய முடியாது. இது முடியாததற்குக் காரணம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல. எவ்வளவோ, நூற்றாண்டுகளாகச் சிறிது சிறிதாக வளர்ந்து, மாறி, தோன்றி வரும் பண்பாடு. இந்தப் பண்பாடுதான் திருடினவனையும் அப்பா, என்றும், கண்ணே என்றும் முத்தே என்றும் அழைக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இன்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. பண போனது பெரிதில்லை. சொல்ல வைக்கிறது. இப்படி அவர்களைச் சந்தேகிக்க வேண்டியம் இருக்கிறதே. இதுதான் கொடுமை. இதுதான் கொடுமை.
1980
