(20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த கவிதைகள்)
யாரும் பார்க்காமல்
நான் நடந்து
அலுத்துப்போன பகுதிகள்
என் கண்களுக்கு எட்டுவதில்லை
யாரும் என்னுடன்
பேச முயற்சிப்பதில்லை
என்னிடம் ஒன்றுமில்லையென்பதால்
பல்லைக் காட்ட யாருமில்லை
இத்தனை நாட்களாய்
நான் வளர்த்தக் குழந்தைகள்
எங்கோ சென்று
எதையோ தேடுகின்றன
பெண் வயிற்றுப் பேரக் குழந்தையுடன்
பேச முயன்றாலும்
என் முக்காட்டைத் தள்ளி
ஓடி விடுகிறது
என்னை முற்றத்தில் கிடத்தி விட்டார்கள்

One Comment on “அழகியசிங்கர்/ முதுமை”
Comments are closed.