அழகியசிங்கர்/விடுதலை



(20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த கவிதை)
 அன்று குச்சிப்போலிருந்தது என் மனசு
எதிரில் தெரிந்தவர்கள் அவ்வாறே தெரிந்தார்கள்
எப்போதும் முழுக்கை சட்டை அணிந்திருப்பேன்
உடல் மறைக்க
வெளியே தெரிந்தது முகம் மட்டும்
எல்லார் முகங்களையும் ஊடுருவும்போது
குச்சிப்போலிருந்த மனசு சுக்கலாகி வெளிப்பட்டது
ஜீவனற்று கிடந்தேன்
நமக்கு இந்த வாழ்க்கை
இப்படித்தானென்று
சோகமாய்ப் பொழுதுகளை நகர்த்தினேன்
யாரைப் பார்த்தாலும்
பேசத் தைரியம் வராமல்
கண்ணில் பட்டவைகள்
மனசாய்த் தெரிந்ததால்
அன்று பார்க்கத் தவறிய
வானமும், நட்சத்திரங்களும், பூக்களும்
கணக்கிலடங்காமல் தொலைந்துவிட்டன
கடற்கரை மணலில் படுத்திருக்கும்போது
மேலே தெரிந்த வானம்
என் மனசாய் விரிய
இன்று அப்படியில்லை நான்

அழகியசிங்கர்/சறுக்கு மரம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/விடுதலை”

Comments are closed.