நின்றுகொண்டும் உட்கார்ந்துகொண்டும்
நடந்துகொண்டுமிருந்த எனக்கு
எண்ணத்தைத் துறக்கலாமென்று தோன்ற
நின்றுகொண்டிருந்த நான்
நின்றுகொண்டிருக்க
கண் இமைகள் அசையாமல்
கைகளும் கால்களும் ஓரிடத்தில் நிற்க
உடல் சாய்ந்து விழுவதுபோல்
தோற்றம் கொள்ள
üஎன்ன ஆச்சு உனக்கெனý
யாரோ பிடித்துக்கொள்ள
தொப்பென நழுவி விழுந்தேன்
விழுந்த இடத்தில் அப்படியே கிடக்க
எல்லோரும் அலறி
கட்டிடம் கிடுகிடுக்க
என்னை ஒருவாறு படுக்கையில்
படுத்த வாக்கில் சயனித்து வைக்க
எல்லோரும் என்னையே பார்க்க
கண்களில் நீர்
பார்க்கச் சகிக்காத யாரோ ஒருவர்
கண்களை மூட
சௌகரியமாய்ப் படுத்தாற்போல இருந்தேன்
கொஞ்ச நேரத்தில்
மருத்துவர் வர
நாடி சுத்தமாய் ஓடிக்கொண்டிருக்க
உடம்பை அப்படியும் இப்படியும் தட்டினார்
'ஒன்றுமில்லை இவருக்கு வெறும் பாசாங்கு'
என்று கூறிச் சென்றார்
எல்லோரும் என்னை விட்டகல
பெண் மாத்திரம்
என்னைச் சுவற்றில் சாய்த்து
சறுக்குமரம் விளையாட
பையன் தலைமேலமர்ந்து
தலைமயிர்ப் பிடித்திழுக்க
üஇவரை வழிக்குக்கொண்டு வர
தெரியுமெனக்ý கென்று
சத்தமிட்டு அவள் வரவே
விழித்தேன் கண்களை அகலமாய்.
7zzf51