அழகியசிங்கர்/ 1. என்னவென்று சொல்வது

   

                     இன்று (20.6 2025) நான் வாசித்த பத்து கவிதைகள்


    மென்மையாய்ப் பட்டுத் துகில்போல்
        வானம்
        விரிந்து கிடக்க
    என்னருகில் மனத்தின் துயர்
        புதர்போல்
        எல்லோரிடமும் சண்டைபோட
        எல்லோரிடமும் நட்புக்கொள்ள
    எல்லோரும்போல்
        எனக்குக் கிடைத்த ஆயுதம்
        வார்த்தைகள்
    எல்லையற்ற மன ஆழத்தில்
    என்னையே புரிந்துகொள்ள
        முடியாமல் போகும்போது
    கேட்பேன் அந்த ரகசியத்தை
        துள்ளிப் பறக்கும் பறவைகளிடம்
        கண்சிமிட்டும் பூக்களிடம்
        விதம்விதமாய் நிறம் காட்டும்
        வண்ணத்துப் பூச்சிகளிடம்
        எட்டாத தூரத்தில்
    ஒளிபிழம்பாய்ப் பிரகாசிக்கும் சூரியனிடம்