ஆர்க்கே/சுமைதாங்கிகள்

சில புஜபல பராக்கிரமசாலிகளின்
விழிச்சிவப்பில்
கோஷத்தில்
வேஷத்தில்
கவன ஈர்ப்புகளில்
கவனத் தவிர்ப்புகளில்
நியாய அநியாய பங்கெடுப்பில்
அநியாய நியாய புறக்கணிப்பில்
பதறல்களில் பாராட்டுகளில்
கதறல்களில் களிப்புகளில்
காலப்போக்கில்
தெரிந்தே விடுகிறது–
அவர்கள் சுமந்து
நின்றது நிற்பது நிற்கப்போவது
உற்சவப் பல்லக்கா
உறைநிலைப் பாடையா என்பது!