அழகியசிங்கர்/2. இதுவரையில்

  

                     இன்று (20.6 2025) நான் வாசித்த பத்து கவிதைகள்


    மாடியில் குடியிருக்க
    இருந்தது சிறிய பகுதி
    மூன்று குருவிக்கூடுகளாய்ப் பிரிந்து நின்று

    கையைத் தூக்கினால்
    பதம் பார்க்கும் மின்விசிறி
    விழி தெறித்து விழப் பார்க்கும்
    சன்னல் வெளிச்சங்கள்
    பக்கத்துவீடு, எதிர்த்தவீடு
    மாடுகளின் சாணம், சாக்கடைகள்
    சந்தோஷப்படுத்தக் கொசுக்கள்
    என்று சன்னல் வழியே தெரியும் தெரு

    மத்ய அடுக்கு அறையில்
    சமையல் பண்ணிச் சாப்பிட
    அப்பா மட்டும்
    படுத்துக்கொண்டு புரள ஓரிடம்
    நான் 'சோபா' வில்
    பாட்டி தம்பிகள் கீழே

    விரிசலாய்க் கிழிந்த சுவர்கள்
    வெயில் காலத்தில் 
    வெயிலாய்த் தகிக்க
    மழையோ
    சன்னல் வழியே கம்பிபோட
    வெளியே எடுத்து வைத்த
    கால்கள் திரும்பும் சேற்றுடன்                    
    படித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு
    சமையல் செய்துபோட பாட்டி
                               அப்பா அரசாங்கத்தில் 
    அம்மா செத்துப்போய்
    ஆயிற்றுப் பதினாறு வருடங்கள்

அழகியசிங்கர்/ 1. என்னவென்று சொல்வது – விருட்சம் நாளிதழ்