அழகியசிங்கர்/ தெரியவில்லை

(20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த கவிதைகள்)

                               எனக்குத் தெரியவில்லை
    யாரிடம் பழகவேண்டுமென்று

    எனக்குத் தெரியவில்லை
    யார் என்னுடன் நன்றாகப் பழகுவார்களென்று

    எனக்குத் தெரியவில்லை
    யாரிடம் எப்படிப் பேசவேண்டுமென்று

    எனக்குத் தெரியவில்லை
    யார் எப்படிப் பேசுகிறார்களென்று

    எனக்குத் தெரியவில்லை
    யார் பின்னால் பேசுகிறார்களென்று

    எனக்குத் தெரியவில்லை
    என்ன செய்வது இதற்கென்று

    ஆனால் 
    முன்னால் சிலர் பின்னால் பேசுபவர்களைப்
    பற்றிச் சொல்லியும் இருக்கிறார்கள்

    பேசாமல் கேட்டுக்கொண்டிருக்கலாம்

அழகியசிங்கர்/ முதுமை – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/ தெரியவில்லை”

Comments are closed.