திண்டுக்கல்சமையல்

உடலை குளிர்ச்சியாக வைக்க அன்னாசிப்பழ மோர்க்குழம்பு……

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கடுகு, கறிவேற்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து பின் அன்னாசி பழத்துண்டுகளை சேர்த்து வதக்கி விட்டு சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.

ஒரு மிக்சி ஜாரில் அரிசி, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் மற்றும் தேங்காய் சேர்த்து அரைத்து பின் அதில் தயிர் சேர்த்து மீண்டும் அரைத்து அதனை கடாயில் சேர்த்து அடுப்பின் தீயனை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். துவரம் பருப்பும் வாசனை செல்லும் வரை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அவ்வப்போது கிளறி விட வேண்டும்.

மோர்க்குழம்பு நுரைத்து வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விட்டு இரண்டு வரமிளகாய் சேர்த்து தாளித்து இதில் சேர்த்து பரிமாறினால் அருமையான பைனாப்பிள் மோர்க்குழம்பு ரெடி! நீங்களும் ஒரு முறை ட்ரை செய்து அசத்துங்க….