அழகியசிங்கர்/ தட்டச்சுப்பொறி

                               

    என்னெதிரிலிருக்கும் 
    இந்தத் தட்டச்சுப்பொறியைப் பற்றி
    எழுத வேண்டாமா?
    அலுவலகத்தில் நாலாவது மாடியறையில்
    ஒரு மூலையின் ஒடுக்கத்தில்
    எங்கும் நகராமல் காத்திருக்கும்
    காலைநேர அவசரத்தில்
    வீட்டிலிருந்து கிளம்பி
    மின்சார ரயில் ஊர்தியில் தொற்றி
    இதன்முன்
    தொப்பென்று விழும்நேரம்
    படப்படப்பாய் மாறிப்போகும் மனநிலை
    இதைத் தொட்டால் போதும்
    ஆதரவாய் விஜாரிக்கும்
    உடன்பிறவா சகோதரன்; ஊக்குவிக்கும்
    நண்பன் என்றெல்லாமில்லை
    தாள்களைத் தன்னுள் வாங்கி
    அடித்துத் தள்ளும் இயந்திரப் பணியாள்
    கொஞ்சம் அயர்ந்திருக்கும் வேளை
    தப்பாய் அடித்து எச்சரிக்கும்
    துளிர்த்திருக்கும் முகத்தின் அசட்டை
    எள்ளி நகையாடும்
    கூப்பிடுவார் மேலதிகாரி உள்ளே
    இதோ அவர் நிகழ்த்தும் அட்டகாசங்களை
    என்னுடன் பகிர்ந்துகொள்ளும்
    யாருக்காவது புரியுமா?
    இந்தத் தட்டச்சுப் பொறியைத்
    தினமும் என் புன்னகையைப் பிரதிபலிக்கும்
    வரம் எங்கிருந்து கிட்டியது இதற்கு.

அழகியசிங்கர்/ தெரியவில்லை – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/ தட்டச்சுப்பொறி”

Comments are closed.