
ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை
சோவென்று கொட்டத் தொடங்கிய
மழையிலிருந்து தப்பித்து
மழைக்குள் புகுந்து
மழையை ஏய்த்து
மழையின் விலகி
மழையை மழையால் கடந்து
மழையைக் கொண்டாடி
மழையோடு ஓடி
மழையின் கைப்பிடித்து நடந்து
மழையோடு வந்து சேர்ந்து
மழைக் கையால் தட்டிய
கதவைத் திறந்து
அலறிப் பதறி
கைத்துண்டு கொண்டு வந்து
‘இப்படியா எங்கும் ஒதுங்காது
நனைந்து வருவாங்க’ என்றபடி
வசவுகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு
தலையைத் துவட்டித் தேடுகிறாய் மழையை
அது கைநழுவிப்போய்
பெய்யத் தொடங்கி இருந்தது
நெஞ்சுக்குள்.

கவிதை அருமை சார் படித்த எங்கள் நெஞ்சுக்குள் மாமழை