
கடல் போல் இசைக்கும்
கருவியில் ஒருவன்
அவனால் முடிந்த அளவு
துள்ளிய கவனத்துடன்
பயிற்சியில் பெற்ற பயனில்
மீட்டிய தாளகதியில்
ஒரே மாதிரியான ஓசையில்
ஆயிரமாயினும் உணர்வை
தரும் சத்தத்தில்
அது எவ்வாறு
கவர்ச்சியான நாதமாகிறது
அவனுக்குச் சொந்தமான
விருப்பத்தை வடிவமைக்கிற
கற்பனையின் பாதைக்கு
வெளியே விரிந்த
இத்தனை பெரிய காட்டில்
ஒற்றை ஆளாக
அவன் நடக்கின்றான்
அவனுக்கான அரூபத்தில்
துடிக்கும் இதயத்தில்
மறைந்த அது தாளம்
——-
