அழகியசிங்கர்/எங்குப் போனாலும்…

நேற்று
மனைவி கோயிலுக்குப்
கிளம்பி விட்டாள்
பாதி தூரத்தில் மழை

திரும்பி
வந்து விட்டாள்

கொஞ்சநேரம் புலம்பிக்
கொண்டிருந்தாள்

நான்கூட
எங்கும் போக முடியாமல்
வீட்டிலேயே முடங்கிக்
கிடந்தேன்

அப்படித்தான் ஆகிவிடுகிறது
சில நாட்கள்

அதேபோல்
தெருவில் காலடி எடுத்து
வைத்தால்
வீட்டிற்குத் திரும்ப முடியாமல் அவஸ்தைப் படுவோம்.

வெளியிலோ உள்ளேயோ
எங்கிருந்தாலும்
ஒரேமாதிரி மனநிலை வேண்டும்

One Comment on “அழகியசிங்கர்/எங்குப் போனாலும்…”

Comments are closed.