
நேற்று நானும் மனைவியும் சூரியனில் இன்று நேற்று நாளை என்ற படம் பார்த்தோம். டூ வீலரில் சூரியன் தியேட்டருக்குச் சென்றோம். ஹெல்மெட்டை கையில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தேன். நான் உட்கார்ந்த சீட்டுக்குக் கீழே ஹெல்மெட்டை வைத்துவிட்டு அமர்ந்தேன். படம் ஒரு அறிவியல் புனை கதையின் பாணியில் எடுக்கப்பட்ட படம். பிடித்திருந்தது. இப்போதெல்லாம் தமிழ் சினிமாக்கள் வேற வேற மாதிரி எடுக்க முயற்சி செய்கிறார்கள். காக்கை முட்டை படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை. இந்தப் படம் பார்த்துவிட்டு வந்தவுடன், ஹெல்மெட்டை மறந்து விட்டேன். சூரியன் தியேட்டர் இரண்டாவது மாடியில் உள்ளது. திரும்பவும் படிக்கட்டுகளைத் தாண்டி தாண்டி ஓடினேன். சூரியன் தியேட்டருக்குள் நான் அமர்ந்த இடத்திற்குச் சென்று சீட்டு கீழே குனிந்து பார்த்தேன். நீங்கள் நினைப்பதுபோல்தான் நடந்தது. ஹெல்மெட்டை காணவில்லை. அங்கே பத்து பதினைந்துபேர்கள் குப்பைகளை பெருக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் சொன்னார் யாரோ ஒருவர் வந்திருந்து ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு போனதாக. அவர்கள் பேச்சை என்னால் நம்ப முடியவில்லை. ஏமாற்றத்துடன் நான் திரும்பி வந்தேன். நான் கன்னி ராசி. என் ராசியில் குரு 12ஆம் இடத்திற்கு செல்வதால், என்னிடமிருந்து பொருள்களை யாராவது களவாடிப் போவார்கள் என்று குரு பலன். அதுபடி இப்படி ஆயிற்றா? ஏன் ஏன் இப்படி ஆயிற்று? இன்னொன்று இந்தப் படத்தில் டைம் மெஷினை வைத்து விஷ்ணு என்ற நடிகரை வரவழைத்து என் ஹெல்மெட்டை யார் எடுத்துக்கொண்டு போனார்கள் என்பதைக் கண்டு பிடிக்க முடியுமா? அநதப் படத்தில் அப்படித்தான் தொலைந்து போன பொருள்களை விஷ்ணுவும், அவர் நண்பரும் கண்டு பிடிப்பார்கள். ஏன் ஏன் ஏன்……இப்படி ஆயிற்று.
