அழகியசிங்கர்/தவம்

தவத்தைக் கலைக்க முடியாது
தவமாய் ஏற்றுக் கொண்டது ஒன்றுமில்லை
சப்த அலைகளைத் தாண்டி
பேரமைதியை நாடும் மனம்
சப்தங்களின் குவியலில் இருப்பு
எண்ணற்றவர் வந்து போகிறார்கள்
சுழற்சி நடந்து கொண்டுதான் உள்ளது
தவத்தைக் கலைக்கக் முடியாது
அது புறத்தில்
நாம் கவனிக்க கவனிக்காமல் நிற்கிறது