விஜயலக்ஷ்மி கண்ணன் கவிதை

ஏதோ ஒன்று நினைந்து
கற்பனை செய்து
கேட்டு விடலாம் என்று
கேட்காமலே இருந்து
ஏதோ ஒன்று நெருடி
கொண்டு
பெரிய குழப்பமாக
ஏதோ ஒன்று உலுக்கியது
ஏதோ ஒன்று தடுத்து
ஏதோ ஒன்று உதடு வரை வந்தும்
ஏதோ ஒன்று சொல்லாமலே.