
இத்தனை நாட்கள்
ஏதோவொன்று என்னை உந்த,
ஏதோவொன்று என்ன, என
அறியாமல்;
ஏதோவொன்று,
ஏதுவாய் இருந்தாலும் என்ன,
ஏதோவொன்று, என வாழ்ந்தேன்.
ஏதோவொன்று என
அனைத்தையும் சுகித்தேன்.
ஏதோவொன்று, அலுப்பு தட்ட,
ஏதோவொன்று
வேண்டும் என,
ஏதோவொன்று, எது எனத் தேட,
ஏதோவொன்று
என்னை என்னவோ செய்ய,
ஏதோவொன்று என்னை கூட்டிச் சென்றது.
சொல்லாமலே.
