
கொஞ்ச நாட்களாய்
எதாவது சிவன்
கோயில் போகவேண்டுமென்று
நினைத்துக் கொண்டிருந்தேன்
எதுவும் சரியாகப் படவில்லை
ஆனால்
மனதில் சிவன் கோயில்
குடி இருந்தது
அசிக்காடு வந்தவுடன்
சிவன் கோயில் கண்டுபிடித்து விட்டேன்
அமைதியின் வடிவம்
எங்கள் முன்
சிவன் தெரிந்தார்
அவர்முன் நான் தெரிந்தேன்
அமைதியாய்ப் பார்த்துக்
கொண்டிருந்தேன்
ஒன்றும் வேண்டிக்கொள்ளவில்லை
ம்..உண்மைதான்
