தள்ளுபடி

சுரேஷ் ராஜகோபால்

தீபாவளி மறு நாள் ஒரு நகைக் கடைக்குள், என் மனைவியுடன், போனேன்

அதுவுமில்லாமல் மாதக்கடைசியை நோக்கி நாட்கள் நகர்வதால் பணம் தட்டுப்பாடு இருக்குமென்று நினைத்து என் நண்பனின் மகளின் திருமண பரிசாகக் கொடுக்க, ஒரு சிறு தங்க நகை, நான்கு கிராமில் தோடு, வாங்க வந்தோம்..

ஆனால் அதிசயம், மிக அதிகமாகக் கூட்டம் இருந்தது பலரும் இரண்டு மூன்று என்றும் பல லட்சங்களில் நகைகள் வாங்கி குவித்துக் கொண்டிருந்தார்கள்.

கடை சிப்பந்திகளும் வேக வேகமாகச் செய்வதால் நிதானமிழந்து செயல் பட்டனர்.. செய் கூலி சேதாரம் என வானளாவிய தொகையை வசூல் செய்தனர்.

அதற்கும் கூட்டம் கட்டுப்பட்டு நகை இதர பொருக்களை வாங்குவதிலே குறியாக இருந்தனர்.

என் மனைவி தூண்டி, துழாவி நாங்கள் வாங்க வந்ததைத் தேர்வு செய்தாள்

நாங்கள் வாங்க வந்ததைச் சுட்டிக் காட்டி எடுத்து பில் போடச் சொன்னோம். “எப்படி அட்டையா இல்லை காசா?” என்று வினவினாள் .

நான் “அட்டைதான்” என்றேன்.
அதற்கான வேலை நடந்தது, கொஞ்ச நேரம் காத்திருந்தோம்,, “காபி குளிர் பானம் வேண்டுமா?” என்று வினவினர் கடை சிப்பந்தி ஒருவர், வேண்டாம் என்று தலை அசைத்தேன்.

நன்றி சொன்னார்கள், வாங்கி கொண்ட நகையுடன் கிளம்ப முனையும் போது, ஒரு நிகழ்ச்சி கண்ணில் பட்டது,

ஒரு வயோதிக ஏழை, தன் மகள் திருமணத்துக்குத் தோடு, ஒரு ஜோடி வளையல்கள் வாங்க முற்பட்டார். பில்லுக்கு ரூபாய் இருநூறு குறைவாக அவரிடம் இருந்ததால், கடை சிப்பந்திகள் நகையை தன் பக்கம் இழுத்துக் கொண்டனர்..

நாளைக்கு மீதி பணத்தைக் கொடுத்து விடுகிறேன் அப்படியென்று கெஞ்சினார். கடைகாரர்க்ள் அதற்கு இணங்கவில்லை.

உடனே நான் அவர் பக்கம் சென்று என் பர்ஸ் எடுத்து அந்த பணத்தைக் கொடுத்துவிட முன் வந்தேன். என் மனைவி என்னைப் பிடித்து இழுத்தாள்.

இருந்தும் அந்த ஏழைக்கு உதவவே முன்னேறினேன்..

அதற்குள் கடையிலிருந்த மேற்பார்வையாரை கூப்பிட்டேன், இது சம்மந்தாமாக உதவச் சொன்னேன். உடனே அவரும் முன் வந்தார்., என்ன நடந்தது என்று கேட்டார். அவர் அந்த பில்லை அவரிடமிருந்து வாங்கி தன் சட்டைப் பையிலிருந்த சிவப்பு பேனாவால் எதோ கிறுக்கினார், அந்த இருநூறு தள்ளுபடி ஆனது..

அந்த பத்து கிராம் நகையை முதியவரிடம், வாழ்த்தி, கொடுத்தாள் , அந்த சிப்பந்தி.
அந்த கடையில் வேலையில் இருந்த பெண்ணும் சரி, அந்த முதியவரும் சரி என்னிடம் நன்றி சொன்னார்கள்..

5 Comments on “தள்ளுபடி”

  1. வெள்ளத்தனைய மலர் நீட்டம்…..

    அருமையான சித்தரிப்பு. தாம் படும் அவதிகள், பல லட்சம் பெறுமான நகைகள் வாங்குவோர் மத்தியில் தாம் கூனிக் குறுகி நிற்பது போன்ற உளவியல் ஆதங்கம், தன்னினும் பன்மடங்கு கீழிருக்கும் ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் நேயம் சுரக்கும் இடம் பிரமாதம்…..அதன் தீர்வும் அருமை.

    சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள் சுரேஷ், வாழ்த்தும் அன்பும்

    எஸ் வி வி

  2. மிக்க நன்றி.
    உளவியல் ரீதியாக பலரும் பின் வாங்கும் இடத்தில், கதாபாத்திரத்தை உதவும் கோணத்தில் வைத்தேன்.

  3. தன்னை மட்டுமல்லாமல் தன் சுற்றுப்புறத்தையும் உற்று நோக்கி தன்னிலும் மேம்பட்டவர்களை விட்டு விட்டு தன்னை போல் பொருளாதாரம் குறைந்திருக்கும் மானுடர்களின் பிரச்சனைகளை உற்று நோக்கி தன்னால் முயன்ற வழி தேடி உதவும் பாங்கு இன்றைய அவசர கால உலகத்திற்கு மிக மிக அவசரத் தேவை.. .

    1. நன்றி நணபரே,
      சரியான கோணத்தில் தங்கள் கருத்தினை பதிவு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

Comments are closed.