- தர்மராஜ்
மஞ்சள்
மலருக்கு
கருப்பு
படுக்கை
சூரியன்
வேறு
எட்டிப்
பார்க்கிறான்
மனிதஜென்மங்கள்
வராதவரை
எல்லாம்
நலமே
2. துரை தனபால்
பள்ளி செல்லும் பாதையிலே துள்ளி ஓடும் பிள்ளைகளின் மெல்லிய சிறு பாதங்கள் கல் உறுத்த நோகுமென, பூச்சிந்தி வரவேற்கும் பொன்னரளிச் செடியும்!
3.அழகியசிங்கர்
மஞ்சள் பூக்களே மஞ்சள் பூக்களே
சாலையில் யார் உங்களைக் கொட்டியது
மரம் உங்களைக் கைவிட்டு விட்டதா
என் மனம் உங்களிடம்
(காலையில் மஞ்சள் பூக்கள் கொட்டிக் கிடந்தது பார்த்துப் படம் பிடித்தேன்)
4. செல்விபிரகாஷ்🌹
எனது பாதை
உன் நினைவெனும் ஈரப்பதமெடுத்து என் மனமெனும் பூமி சிலிர்த்துக்கிடக்கிறது.
அடைந்துகிடக்கும் உன்
காதலின் கதகதப்பால் இதயத்தின் சந்தோஷ சீதோக்ஷனத்தில் துளிர்விட ஏராளமாய் ஏதேதோ காத்துக்கிடக்கின்றன
கிழ்வானம் சிவக்கலாம் சூரியனாய்ச்சில வேதனைகள் வெறித்துப்போகலாம், சந்திரனாய் நட்சத்திரமாய் இயற்கை என்னை கண்சிமிட்டி அழைக்கலாம்.
மழையாய் வானம் குளிர்விக்கலாம்
பூவுலகாய் பூத்துக்கிடக்கும் என் கொஞ்சலுக்காய் ஏகாந்தம் மஞ்சளாய் பாதைவிரிக்க நான் கடந்து போகிறேன் உன்னைமட்டும் மனதில் நிறுத்தி.
எனக்கானப்பாதை மகரந்தம் வீசியபடி
