சுரேஷ்ராஜகோபால்/கபடி கபடி

(விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த ஆறாவது கவிதை)

கபடி கபடி சிறுவர்கள் ஆட்டம்
சிறுவர்கள் கபடி விளையாட்டு
பேரன் விளையாட்டை ரசிக்கவே
போனேன் வேட்டியோடு
என் வயதோ எழுபதின் எல்லை .

அணி பிரித்தார்கள்
ஒரு அணிக்கு
ஒரு ஆள் குறைந்தது
என்னையும் விளையாட்டில்
சேரச் சொன்னார்கள்.

குழந்தை விளையாட்டுதானே
வீம்பெதற்கு, அணி சேர்ந்தேன்
‘கபடி கபடி” என்று மூச்சிரைத்தேன் ஆட்டமிழந்தேன்
அடுத்த ஆட்டத்துக்குக் காத்து இருந்தேன்.