நாகேந்திர பாரதி/ஆராய்ச்சி


கையில் கிடைத்ததை எல்லாம்

கடித்துப் பார்த்தும்
உடைத்துப் பார்த்தும்

ஆராய்ச்சி செய்த பேரன்
அமெரிக்கா போய் விட்டான்

கடிப்பதற்கும்
உடைப்பதற்கு
இன்னும் இருக்கின்றன
ஏராளம் இங்கே

ஆராய்ச்சி தொடர்வதற்கு
அடுத்த வருடம் வருவான்

One Comment on “நாகேந்திர பாரதி/ஆராய்ச்சி”

  1. பேரன் உடைத்து விட்டு
    ஒரு அப்பாவி முகத்தை
    வைத்துக் கொண்டு
    “தெரியாம உடைச்சிட்டேன்” னு
    அழுகையாக சொல்லும் போது
    “சரிடா சரிடா ” என்று நாம்
    சமாதனப்படுத்துவதே
    தாத்தாவின் வேலை

Comments are closed.