
விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த ஒன்பதாவது கவிதை
கண்களால் பார்த்து
இதயத்தால் இணைக்கப்பட்ட
உறவென்பது சுமுகமாக
வாழ்ந்து வந்தால்
பல ஜென்மங்கள் தொடரும்
யாராலும் பிரிக்க இயலாதது…
உண்மையான அன்பு
இதயத்தில் விதைக்கப் பட்டிருந்தால்
நித்தமும் மகிழ்ச்சியே
சித்தம் தெளிவு பெரும்
வாழ்க்கை அமைதி பெரும்
பெருவுவகை காத்திருக்கும்
