
விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த எட்டாவது கவிதை
பூவித்த பெண்ணொருத்தி
“மல்லி முல்லை ஜாதி”
என்றே குரல் கொடுத்து
வீதியில் சென்றாள்,
அவளையே பார்த்தான். 1
மலரிலே ஜாதி உண்டா?
கண்ணைக் கசக்கிக்
கேட்டுக் கொண்டான்
உள்ளது போலும்
மௌனமாக ஏற்றுக்கொண்டான். 2
அவனோட பெண்சாதி
பூக்காரியை அழைத்து
பூச்சரம் வாங்கினாள்
பூக்காரி அவனை உற்று நோக்கினாள்
வீட்டுக்காரி அவனை முறைத்து நோக்கினாள். 3

One Comment on “சுரேஷ்ராஜகோபால்/மலருக்கு ஜாதி உண்டா?”
Comments are closed.