சுவாமிராமதாஸர்அருளிய_கதைகள்

மரத்தடியில் ஒரு மஹான் உறங்கிக் கொண்டிருந்தார். ஒரு மனிதர் அவர் மேல் பகைமை கொண்டிருந்தார். அவரைப் பிடிக்கக் கொஞ்ச நாட்களாகவே முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த மனிதர் அங்கே வந்தார். வாளை உயர்த்தியபடி கத்தினார். “ஏய்! எழுந்து பார். நான் இறுதியாக உன்னைப் பிடித்துவிட்டேன். இப்பொழுது உன்னைக் காப்பாற்ற யார் இருக்கின்றனர்?”

மஹான் எழுந்தார். “இறைவனே என் எஜமானர். அவரே என் பாதுகாவலர். அவர் இங்கே எனக்கு உதவி செய்யத் தயாராக இருக்கின்றார்” என்று அச்சமற்ற குரலில் கூறினார். இது பகைவனைப் பதற வைத்தது.மஹான் திடீரென்று பகைவனின் கைகளில் இருந்த வாளைப் பிடுங்கிக் கொண்டார். ”இப்பொழுது சொல். உன்னை யார் காப்பாற்றப் போகின்றனர்?” என்று கேட்டார்.

நிலைமை திடீரென்று மாறியதைப் பகைவன் உணர்ந்தான். பயத்தில் நடுங்கினான். உதடுகள் உலர்ந்தன. ”உண்மையில் எனக்குத் துணை யாரும் இல்லை. இங்கே என்னைக் காக்க யாரும் இல்லை. என் மேல் கருணை வையுங்கள்” என்று கூறினான்.

மஹான் வாளைத் தூக்கி எறிந்தார். உன் வாளை எடுத்துச் செல். ”பரிவும், கருணையும் நிறைந்த ஒரு வழி இருக்கிறது. இன்றிலிருந்து அதை என்னிடம் கற்றுக் கொள்’ என்று கூறினார். அந்த மனிதன் தன் நடத்தைக்கு வெட்கம் அடைந்தான். மஹானின் கால்களில் விழுந்தான். அன்றிலிருந்து அவன் பகைமையைக் மஹானின் தீவிர பக்தன் ஆனான். கைவிட்டான்.

     -