பர்வதி சலில்

  1. அலை மீண்டும் வரும்

அலை எப்போதும் நிலைத்து இருக்காது
அது வந்து செல்கிறது
அது வந்து செல்கிறது.

கடல் உப்பாக இருக்கிறது,
அளவில்லாததாய், ஆனால் நிலைத்ததல்ல. என்றாலும்,
தற்காலிகமான அலை
காதலின் குமிழ்க்காக
கரை காத்திருக்கிறது
காலை முதல் இரவு வரை.
அலை எப்போதும் நிலைத்திருக்காது
என்றாலும் கரை அதை நன்றாகவே அறியும்.
அப்படியே, கரை
அன்று முழுவதும் இரவும் காத்திருக்கிறது
காதலால் நிரம்பிய உயிருடன்
ஏனெனில், அது அறிவது
அலை மீண்டும் வருவதை —
தன் உலர்ந்த மணலை நனைக்க…

2.

  • காதலுக்கான அழகான ஆசை

நான் விழித்தவுடன்

தோட்டத்தில்  நடந்தேன்

மகிழ்ச்சியான சுவையான சத்தத்தில்

காதலில் மூழ்கிய சிட்டுக்குருவிகளைப்  பார்த்தேன்.

காற்றுத்  தூய்மையாக இருந்தது,

புதிய நாளின் முதற்காற்றால்

 இளமையாகவும் பரவசமாகவும் இருந்தது.

அந்தத் தூய்மையான காற்றில்

 நான் ஆசையுடன் மூச்சிழுத்தேன்.

அழகான குட்டிக்குருவிகள்

அமைதியில் கட்டிக்கொண்டிருந்தன,

அவை ஒன்றோடொன்று, கட்டி  முத்தம் ஈந்தது

, காதலுடன் துடித்தன.

நான் அமைதியாக உட்கார்ந்து,

பொறாமையுடன் பார்த்தேன்.

எவ்வளவு அழகானது

 இந்த காதலுக்கான ஆசை…

சலில், பர்வதி:


ஆγ்கிலத்தில் கவிதை எழுதும் இளம் எழுத்தாளர்;
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் படித்து வருகிறார்; Rhapsody என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்;
2012ஆம் ஆண்டில் மாநில அளவிலான எழுத்துப்பிழைத் தேர்வில் (Spelling Bee Championship) இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.