அன்புச்செல்வி சுப்புராஜூ/மனிதத்தில் மட்டும் ஏனிப்படி?

விருட்சம் நடத்திய கவியரங்கில் நான் வாசித்த நான்காம் கவிதை

தயக்கமென்பதே அறியாது
அடுத்தொன்றின் அந்தரங்கத்தினுள்
வரம்பு மீறி நுழைந்து
எதுவும் ஒழுங்கல்ல
எனக் கூக்குரலிடும் மனிதத்தின்
எச்சில் தெறிப்புகள் விழாதவாறு
முகத்தைக் கைகளால்
மூடிக் கொள்கிறது அது!

சீறும் சினத்தை
சிதறவிடாது விழுங்கிட…
வடித்த விசத்தில்
தோய்த்த கொடுக்குளாய்
குரல்வளையை நெரிக்கும் அவமானங்களின் உச்சத்தை
விழுங்க வியலாது
பிதுங்குகின்றன கண்கள்…

வாழ்க்கையின் ஏடுகளைத் திருப்ப
குற்றமில்லாத குற்றப்பத்திரிக்கைகளே
சுமத்தப்பட்ட பேருண்மைகளாக…
ஏற்றலும் தாழ்த்தலுமான
பழங்கணக்கில்
விதிர்விதிர்க்கிறது நெஞ்சம்!

தொடுவானத்தில் ஏதேதோ புள்ளிகள்
ஒன்று சேருகின்றன, பிரிகின்றன
திரும்பவும் கூடுகின்றன…
மனிதத்தில் மட்டும் ஏனிப்படி… ?

அன்புச்செல்வி சுப்புராஜூ /அதனதன் போக்கில் – விருட்சம் நாளிதழ்

One Comment on “அன்புச்செல்வி சுப்புராஜூ/மனிதத்தில் மட்டும் ஏனிப்படி?”

Comments are closed.