ஸ்ரீஅன்னை அரவிந்தரைப் போற்றும் பாடல்கள்
(அன்னை தியான மையங்களில் பாடுவதற்காக முப்பது வருடங்களுக்குமுன்பு நான் எழுதிக்கொடுத்த பாடல்கள்.)

(1)
தூபம் கமழும்
துளசி மணம்
கொலு விருக்கும்.
தூயமலர்க் கூட்டம்
தொழுது, பணிந்து
சுகந்தமணம் பரப்பும்.
வார்த்தை ஒடுங்கும்
மௌனம் லயிக்கும்.
எண்ணம் அடங்கும்
இதயம் லேசாகும்.
அன்னையுடன் அரவிந்தர்
ஆழ்ந்த சமாதியிலே
அருகே வந்தவர்க்கும்
ஆன்மா விழிப்படையும்.
காலத்தால் கட்டுண்ட
கர்மவினை அழியும்.
கலக்கம் மறையும்
கண்கள் ஒளியேறும்.
வாழ்க்கைச் சிக்கல்கள்
வாசலிலே நின்றுவிடும்.
நெஞ்சம் இனிக்கும்
தியானம் நிலைத்துவிடும்.
(2)
அன்னை அன்னை அன்னைஎன்றுஎன்றும் பாடுவோம்!
அன்னை பெற்ற பிள்ளைகள் நாம்
ஒன்று கூடுவோம்!
ஆதி என்றும் அந்தம் என்றும்
அற்ற பரம்பொருள் -நம்
அறிவு ஞானம் எல்லாம் கடந்த
வேத விழுப்பொருள்
வாழ்வனைத்தும் யோகம் என்று
காட்டும் கருப்பொருள் மனித-
வடிவில் வந்து நம்மிடையில்
இருந்த பேரருள்! (அன்னை..)
வங்கம் விட்டு இங்கு வந்த
தேவ தாமரை -வீட்டு
வாசல் தேடி ஓடி வந்த
தேவ சூரியன்!
பொங்கி மின்னும் அலைகள்வீசிப்
பொலியும் பாண்டியில்
புதைந்திருக்கும் மனம் கடந்த
ஞானப் பொக்கிஷம்! (அன்னை..)
அன்னை என்னும் இவரைநாடத்தடைகள் இல்லையே!
அன்பு நெஞ்சம் அன்றி வேறு
தகுதி இல்லையே!
பூசை என்றும் வேள்வி என்றும்
முறைகள் இல்லையே -நீ
புரியவேண்டும் சரணாகதி,
வேறு இல்லையே! (அன்னை..)
கலங்கிடாத பக்தி கொண்ட
எண்ணம் போதுமே!
கருத்தினிலே சோர்வில்லாதகடமை போதுமே!
கள்ளமற்ற வெள்ளை உள்ளம்ஒன்று போதுமே-
3)
அடிக்கடி உனைக்காணும்
வரம் வேண்டும் – அம்மா
அழியாமல் நெஞ்சில் உன்
அருள் வேண்டும்!
படிக்கொரு துணையாய் நின்பதம் வேண்டும்
உன்னைப்
பாடும் பணியே தான்
நிதம் வேண்டும் – அம்மா

நன்றி சார் உங்களால் அன்னையை
படிக்க வாய்ப்பு கிடைத்தது