
அவர் ஆணழகன் இல்லை. கலாபூர்வமான நடிகரும் இல்லை. அவரது ஒரு படமும் அவரது நடிப்பிற்காக நினைவுவைத்துக்கொள்ளும்படியானது இல்லை. இருந்தும் எல்லாம் பெரிய ஹிட் என்கிறார்கள் . ரசிகர்களை வெறியர்களாக மாற்றியிருக்கிறது. அது வெறி. ரசனை இல்லை. ரஜினிகாந்துக்கு வந்த மாதிரியான கூட்டம் இல்லை. நான் கமல்ஹாசனின் ரசிகை. றஜினிகாந்தின் நடிப்பை பல படங்களில் ரசிக்க முடிந்தது . விஜய்? சுத்தமாக முடியவில்லை. இருந்தும் அந்த ரசிக பட்டாளம் அவரை அரசியல் பீடத்துக்கு ஆசைப்பட வைத்திருக்கிறது. அவருக்கு வந்த் கூட்டம் என்னை மிரள வைத்தது. விஜய் அதைப்பார்த்துப்பார்த்து புளகாங்கிதம் அடைந்தார். அப்போதே தமிழகத்து முதல்வர் ஆகிவிட்டதாக நினைத்தார். அரசியலில் பழம் தின்று கொட்டைஉமிழ்ந்தவரை எல்லாம் துச்சமாக விளித்துக்கிண்டல் செய்தார், இன்னும் தேர்தல் களம் காணாத நேற்று முளைத்தவர். அவரது குறிக்கோள் என்ன ? திமுகவை வீழ்த்துவது . கொசுறாக பாஜகவை கொள்கைரீதியாக எதிர்ப்பது. அந்தப்பேச்சுத் திமிர் பேச்சு. ஆணவப்ப்பேச்ச. இவரது கொள்கை என்ன , என்ன திட்டம் , மூச், அதெல்லாம் அந்த வெறிக்கும்பலுக்குத் தேவையில்லை. எப்படியும் ஹீரோவுக்கு வாக்களிப்பார்கள்.அவரை’தரிசித்த’ பிறகு கலைந்து போக ஆரம்பித்தார்கள். தமிழ் சினிமா வேலையற்ற இளைஞர்களை மட்டும் மயக்கவில்லை நடிக்கும் நாயக்கர்களையும் மயக்குகிறது. தமிழ் வாக்காளர்களையும் மயக்கிவிடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.

nji5dn