
விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த எட்டாவது கவிதை. கவிதை எண்: 8
ஆதிக்குயவன்
ஒளி உமிழும்
மாட விளக்கு அணைந்துவிட
வெளிச்சத்தின் கூர் முனை மழுங்கிய
கும்மிருட்டில்
ஈரக்களிமண்ணில் பிள்ளையார்
பிடித்து வைத்தான்
ஒருசில பிள்ளையாருக்காக
நாங்கள் எல்லோரும்
குரங்காகிக் கொண்டிருந்தோம்!
