மதுவந்தி/பக்குவம்

15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில், 8 ஆம் கவிதை.

குரு கேள்வி கேட்கிறார்,
உடன் விடை சொல்ல
விழைகிறான் சீடன்.

பொறு என்கிறார்,
இந்தக் கேள்வி என்றில்லை,
கேட்கும் எந்தக் கேள்வியானாலும்,
அதை உள்வாங்கி, யோசித்து,
நிதானமாய் விடை சொல்
என்கிறார்.

இது வினாடி வினா இல்லை
சரியான விடை
தவறான விடை
என்பதும் இல்லை

ஒரே செடியானாலும்
மொட்டுகள்
பூக்கும் தருணங்கள்
வேறு வேறு.

அவரவர் பக்குவம்
அவரவர் புரிவு .

மதுவந்தி/வழியனுப்புதல் – விருட்சம் நாளிதழ்

2 Comments on “மதுவந்தி/பக்குவம்”

Comments are closed.