
15 8 2025 கவியரங்கத்தில் நான் படித்த கவிதை
நான் உன்னை சிறிது தான் அறிவேன்
பாறை இடுக்கில் முளைத்த செடியில்
பூத்த சிறு மலர் போல்
உனக்கோ என்னை தெளிவாகத் தெரியும்
ஏன் இன்னமும் காயப்படுத்திக் கொள்கிறோம்?
இரண்டாய் பிரிந்து ஏன் இத்தனை வாத விவாதம்?
உண்மைதான்
எனக்கும் உனக்கும்
நம்மை விட்டால்
யார் இருக்கிறார்கள்?

One Comment on “பானுமதி/மறைந்திருந்து…”
Comments are closed.