
15 8 அன்று விருட்சம் கவியரங்கத்தில் நான் படித்த கவிதை
உங்கள் வாசற்படியில் நின்று கொண்டிருக்கிறேன்.
கேட்பது யாசகம் தான் எனினும்
கேட்பதும் அவசியமே
கருணையும் பரிவும் வேண்டாம் எனச் சொல்லும்
கருணை என்னிடம் இல்லை
என் ஓட்டை கைகளில்
நீ சிறிதாவது அன்பு பிச்சை தந்துவிடு
முடிந்தவரை சிந்தாமல்
எடுத்துச் செல்கிறேன்
