மதுவந்தி/கை நாட்டு

15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று, விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில்,9 ஆம் கவிதை.

நானும் என் அம்மா
மனைவியோடு
கிராமத்திலிருந்து
தலைநகருக்கு,
மகன் புதியதாய் வாங்கிய
வீட்டுக்குப் பால் காய்ச்ச
பயணம்.

வந்து சேர்ந்து
ஓரிரு நாட்கள் சென்று
மாலைத் தேநீர் வேளையில்
மெதுவாக அருகே வந்த அம்மா
கவலையோடு கேட்டாள்,
“ நானே லெச்சுமினு
கையெழுத்துப் போட
கத்துக்கிட்டேன்.
இந்த பிள்ளை ஏன்
கை நாட்டு வைக்குது
இன்னும்?”.

வீட்டு வாசல் கதவு
அறிதிறன் பேசி
மடிக்கணினி
எல்லாவற்றையும்
கைப் பெருவிரல் வைத்து
திறப்பதைப் பார்த்தபின்
கேட்கிறாள் இப்படி.

வளர்ந்த தொழில்நுட்பம்
வேர்களுக்கே மீண்டும்
அழைத்துச் செல்கிறதென
எப்படி விளக்குவது ?

மதுவந்தி/பக்குவம் – விருட்சம் நாளிதழ்