விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த பத்தாவது கவிதை
கவிதை எண்: 10

சிற்றலைகள் கால்களை வருடாமல்
திரும்பச் செல்கையில்
ஏமாந்து போகிறாள்
இப்படி ஒவ்வொரு அலையும்
அவளை தீண்டாமல் திரும்பிச்
செல்கிறது
அவள் பிடிவாதமாக
கடலை நோக்கி முன்னேறுவதை
தவிர்க்கிறாள்
அசையாமல் நிற்கும்
அவளின் மனவோட்டத்தை
கடல் அறிந்து கொள்கிறது
திடீரென ஒரு பேரலை எழுந்து
அவள் கால்களை வந்து
நனைக்கிறது
திரும்பிச் செல்கையில் அலை
அவள் பாதங்களில்
குழிபறித்துச் செல்கிறது
அவளும் நானும்
ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தோம்
எனக்கும் அவளுக்கும் கடல்
வெவ்வேறாக தெரிந்தது!
