
விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த ஆறாவது கவிதை
பொத்தி பொத்தி
வளர்த்தாள்
ஒன்று தறுதலையாகும்
இன்னொன்று தமிழ் வளர்க்கும்
என்று
நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்
அவளுக்கு வேண்டுமென்று
ஒரு கவளை சோற்றையாவது
தட்டில் எடுத்து வைத்ததில்லை
நாங்கள்
வளர வளர
சுமையை பகிராமல்
மேலும் பாரமானோம் அவளுக்கு
இரத்தத் திமிரில்
வம்பை வீட்டுக்கு கொண்டுவர
ஒரு நாளும் எங்களுக்கு
பரிந்து பேசாமல்
இருந்ததில்லை அவள்
எந்த வேலையிலும் நிலைக்காது
சொந்தமயாய் தொழில் வைத்தோம்
ஒரு காசு வட்டியில்
அசலையும் வட்டியையும்
சேர்த்து சுமந்தாள்
வாழ்க்கை
யார் காலையும்
வாராமல் விட்டதில்லை என்பாள்
உணர்ந்து சொல்கிறாள்
என்று உணராமல்
வயிறு வளர்த்துக் கொண்டிருந்தோம்
நாங்கள்.

s605ca