
தித்திக்கும் தின்பண்டம்
திகட்டாத இன்பம் தரும்
அம்மாவின் கைப் பக்குவம்
அவளது அருமையான அனுபவம்
நல்லெண்ணெய் தேய்த்து நீராடிய பின்
புது ஆடைகள் உடுத்து இறை வணங்கி
ஒக்காரயும் தோசையும்
உட்காரவைத்து பரிமாறும் இல்லாள்
கையில் மின்னும் புதிய ஜோடி வைர வளையல்.
பிள்ளைகள் சிரிப்பு கொண்டாட்டம் தான்.
துள்ளி நடக்கும் அப்பாவின் குஷியோ பெருமையோடு ஆட்டம்.
சொந்தங்கள் வந்து வாழ்த்தியும்
விருந்து உண்டும்
பந்தங்களை மறக்காமல் மகிழ்ச்சி பொங்கும் இன்ப தீபாவளி.
20.10.2025
