நாகேந்திர பாரதி/நடக்கும்போது நடக்கிறது

14-11-25 அன்று அழகியசிங்கர் இன் இணையவழி கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட எனது முதலாம் கவிதை

நடந்து போகையிலே என்னென்னமோ நடக்கிறது
செருப்பு போடாவிட்டால் தரை சுடுகிறது

புதுச் செருப்பு போடும்போது விரலைக் கடிக்கிறது
மழைக் காலத்தில் சகதி அடிக்கிறது

வேக வண்டிகளால் தண்ணீ அபிஷேகம்
ஓரமாகப் போனால் கல்லும் மண்ணும்

நடுவே போனால் தார்க்கல் ஒட்டுகிறது
அவசரமாக ஓடும்போது செருப்பு பிய்கிறது

நிதானமாகப் போனாலும் யாரோ திட்டுகிறார்கள்
கார் ஒன்று வாங்கி விடலாம் பணம்தான் வேண்டும்