
அம்மா சுஜாதா பயங்கர சுத்தக்காரி.
வீட்டை வெகு நேர்த்தியாக வைத்திருப்பாள்.
எல்லா விஷயங்களிலும் அப்பாவுடன் ஒத்துப் போகும் அவள், அவருடன் சண்டையிடுவது இந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமே.
அவளுக்கு தேவையில்லாத பொருட்களை வீட்டில் சேர்க்கப் பிடிக்காது.அப்பாவுக்கோ பழைய பொருட்கள் எதையுமே தூக்கிப் போட மனம் வராது.
நாட்கள் கடந்து ,அப்பா காலம் முடிந்து, பெண்ணும் பிள்ளையும் மேல் நாட்டில் செட்டில் ஆகி விட, அம்மா மட்டும் இங்கே தனியாக வீட்டில். குழந்தைகளுடன் வெளி நாடு செல்ல மறுத்து விட்டாள் யாரும் இல்லாததால் அம்மா வீட்டை மிகத் தூய்மையாக வைத்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டே இந்தியா வந்த மகன் அரவிந்த் துக்கு ஒரே அதிர்ச்சி !
வீடு முழுக்க அப்பா உபயோகித்த பொருட்களும்,புகைப்படங்களும் , புத்தகங்களுமாக ஒரே களேபரம் !
இப்போதெல்லாம் வீட்டைச் சுத்தம் செய்தாலே தனக்கு வீசிங் வந்து விடுவதாகவும், வேலைக்கு ஆள் எதுவும் செட்டாகவில்லையென்றும், யாரும் இல்லாத இந்த வீட்டில் தன் தனிமையைப் போக்குவது அப்பாவின் பழைய சாமான்கள்தாமென்றும் , அவற்றுடன் வாழ்வது அப்பாவுடன் இருக்கும் உணர்வைத் தருவதாகக் கூறிய அம்மாவை, கண்ணீருடன் பார்த்தான் அரவிந்த்.

நன்றி அழகிய சிங்கர் சகோதரரே
ஒருவரை இழந்தபின் தான் வலிபுரியும்னு யதார்த்தமாக சொல்லி இருக்கீங்க
Super
கால மாற்றம், மனமாற்றம்.
சிறிய கதை ஆயினும் மிகவும் நெகிழ்ச்சியாக பின்னப்பட்டுள்ளது
நல்லகதை