
காந்தி நூல் நிலையம்.புராதனப் பாணியில் கட்டமைப்பு கொண்ட அந்த நூலகத்தின் உள்ளிருந்து வெளியே பார்க்கும்படி இருந்த கண்ணாடி அமைப்பு இயற்கையோடு இயைந்து பரிமளித்தது.
ஊம்… என்ன இருந்து என்ன … இந்த டிஜிட்டல் யுகத்துல நம்மள சீந்த நாதியில்லாம போச்சே…. தமிழ் வரிசையில் அடுக்கப்பட்டிருந்த இதிகாசம் மற்றும் புராணம் சார்ந்த புத்தகங்கள் புலம்ப….
கொஞ்சம் புலம்புறத நிறுத்தறீங்களா… இன்னைக்குக் கொடிகட்டிப் பறக்குற நாங்களே அமைதியாயிருக்கோம்…. டெக்னாலஜி வரிசையில் அடுக்கப்பட்டிருந்த செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த புத்தகங்கள் அதட்டின.
நமக்குள்ள எதுக்குப்பா வீண் சண்டை… சைக்காலஜி புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து சமாதானக் கொடி பறந்தது.
நாமெல்லாம் கடந்து போன… இனிவரும் காலங்களுக்கான யுக சாட்சிகள். இதுவும் கடந்து போகும்…. நமக்கும் மக்கள் கையில் சகஜமாப் புழங்குற காலம் வராமயாப் போயிடும்…
புத்தகங்கள் யாவும் ஒரு வழியாய்ச் சமாதானமாகின.

எளிமை, இனிமை.