மாலா மாதவன்/சுயம்வரம்

தாரிணியால் தன் கையில் திணிக்கப் பட்ட புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.
ஐ ஐ டியில் கோல்ட் மெடலிஸ்ட் அவன். திருமண விஷயத்தில் அவனுக்கு வைக்கப் பட்ட இந்த தேர்வு புதுமையாக இருந்தது.
“டேய்! பொண்ணு பார்க்க வரச் சொல்லிட்டு இப்படி டெஸ்ட் வைக்கற பொண்ணுல்லாம் நமக்கு சரிப்படாதுடா. எழுந்து வா!” அப்பா சத்தம் போட்டார்.
“இதென்னடா படம்? இந்தப் பொண்ணுக்கு இத்தனை கைகள் இருக்குதாமா? பொண்ணுன்னா வேலை இருக்கத் தான் செய்யும். முன்னாடில்லாம் வெளி வேலைக்குப் போகல. இப்ப அதுவும் சேர்த்துக்குச்சு. அதுக்கென்ன பண்றது? ஆமா இந்தப் படத்தை ஏன் வர்ற எல்லோருக்கும் கொடுக்குது இந்தப் பொண்ணு?” அம்மா நொடித்தாள்.
“இன்னும் கல்யாணமே ஆகல. அதுக்குள்ள இப்படியொரு டெஸ்ட் வைக்கறாளே! கல்யாணமாகிட்டா தினம் ஒரு டெஸ்ட் தானோ?” இது அக்கா.
எந்தப் பேச்சும் அரவிந்தின் செவியில் ஏற வில்லை.
பத்துக் கைகள் கொண்ட பெண் ஓவியம் அது. ஒவ்வொரு கரமும் ஒரு வேலை செய்து கொண்டிருந்தது.
இதை வைத்து நான் என்ன பண்ண? அரவிந்த் முழித்தது ஒரு கணம் தான். மறுகணம் அப்பேப்பரின் பின்புறம் சுயமாய் ஒரு ஓவியத்தை வரைந்தான்.
அதில் அப்பெண் அமர்ந்த இருக்கையை மட்டும் தன் இரு கரமாக மாற்றி இருந்தான்.
தாரிணி கல்யாண வைபோகமே!

பி.ஆர்.கிரிஜா/சாமர்த்தியம் – விருட்சம் நாளிதழ்

5 Comments on “மாலா மாதவன்/சுயம்வரம்”

Comments are closed.