மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதை 1

14.11.25 விருட்சம் இணைவழிக் கவியரங்கில் எனது கவிதை.

களவொழுக்கம்.
கல்லூரியில் கண்ட கனா,
மோதலில்
புகுந்த ஈர்ப்பிலே
இருமனம்
இடம் மாறுமா?.

இதுதான் என விதி
ஏதும்
வகுக்க இயலாது.

எங்கோ பிறந்து வளர்ந்து
இணையும்
உறவிது.

பிறவி உண்டோ இலையோ
அறம்
சார்ந்து விட்டு விலகாத
சொந்தமிது.

சண்டை உண்டு,கோபம்
உண்டு,
சமயத்தில் செய்யும்
செயல்கள்
வெறுப்பதும் உண்டு.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
சாட்சி
இன்றி அரங்கேறும்.

ஓருயிரின் மான அவமானம்
இரண்டிற்கும்
விதியாகும்.

இருமனம் இணைவதே
இனிய
இல்லறமாம். அதுவே நந்தமிழர்
வழிவழி
நல்லறமாம்.

களவொழுக்கம் தொட்டால்
கற்பு மணம்
அங்கே உறுதியெனும்
பரிசம்.

இன்று களவொழுக்கம்
மனம்
பார்ப்பது இல்லை. ஏன்?
மனிதம்
பார்ப்பதும் இல்லை.

இந்த பெயரில் அந்த
நாடகம்
வெறியாட்டு நிகழ்த்தும்
களம் மட்டுமே.

முறையற்ற உணர்வுத்
தூண்டல்,
முடியாத போது வீச்சறிவாள்,
அமிலம்
பரிசு
தந்து வெட்ட வெளியில்
கொட்டி
முழங்கும்.