அழகியசிங்கர்/ இவர்

                              

14.11.25 விருட்சம் இணைவழிக் கவியரங்கில் எனது கவிதை – 2

    இவரோடு இருந்தவர்களெல்லோரும்
    உரிய காலத்தில் படித்துவிட்டார்கள்
    இவரோடு இருந்தவர்களெல்லோரும்
    சில ஆண்டுகள் சுற்றியலைந்து
    வேலைக்கும் சென்று விட்டனர்
    இவரோடு இருந்தவர்களெல்லோரும்
    வேலைக்கும் சென்று கல்யாணமும்
    செய்துகொண்டனர்
    சிலர் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர்
    இன்னும் சிலர்
    குழந்தைகளில்லை என்று இவரிடமும்
    சொல்லிக்கொண்டிருந்தார்கள்
    குழந்தைகள் வளர ஆரம்பித்தார்கள்
    இவருடன் இருந்தவர்களில்
    குழந்தைகள் இருந்த சிலரும்,
    குழந்தைகள் இல்லாத சிலரும்,
    இவரைப் பார்ப்பதில்லை
    இவரோ
    குழந்தைகளுடன் சுற்றத் தொடங்கிவிட்டார்

One Comment on “அழகியசிங்கர்/ இவர்”

Comments are closed.