பிரதீபன் கவிதை

உள்ளே ஒளிந்திருக்கும்
ஓலைச்சுவடியை
மெல்லப் புரட்டலானான்;
எழுத்தொன்றும்
இல்லாததைக்கண்டு
முதலில்
அஞ்சி விழித்தான்;
வெறுஞ் சுவடியைக்
கையால் வருடிப்
பின்னர் மகிழ்ந்து சிரித்தான்.