‘நீருண்ட மேகங்கள் நிலம் பார்க்காததால் தாகத்தால் தவித்தது மரம். அதன் பட்டைகள் செதிலாய் மின்னியது. ஊன்றிய கிளைகள் தனி வீடாக கிளைக்கும் மரத்துக்கும் சம்பந்தம் இல்லா நிலையில் தனக்குத் தானே மௌன தண்டனை கொடுத்துக் கொண்டது மரம்.’
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் தாக்கிய இவ்வரியில் மின்னல் பாய பயணமானான்.
“அப்பா!”
தாகம் தணிந்தது.


ஸூப்பர். சுருக், நறுக்.
சுருக்கமான உருக்கம்
அருமை
சூப்பர். நறுக்குன்னு அழகாக சொல்லிவிட்டீர்கள்.
கீதா